TV

6807407510_87e96e8176_b

சென்னை, 21.04.19:

ஐபிஎல் 2019 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தெந்த அணிகள் ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இந்நிலையில் தற்போதைய சூழலில் எந்தெந்த அணிகள் ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது என பார்ப்போம்.

இந்த ஐபிஎல் தொடரில் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னை அணி மீதமுள்ள 5 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். 16 புள்ளிகள் பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடலாம்.

அடுத்ததாக மும்பை இண்டியன்ஸ் அணி 10 போட்டிகளில் ஆடி 6 போட்டிகளில் வென்று 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் சென்னை மற்றும் மும்பை அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. அடுத்ததாக டெல்லி கேப்பிட்டல் அணி 10 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன், கிங்ஸ் பஞ்சாப் அணிகள் 10 போட்டிகளில் 5 ல் வென்று 10 புள்ளிகளுடன் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மும்பை மற்றும் டெல்லி 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் மும்பை அணி 3ம் இடத்திலும், டெல்லி அணி 4 ம் இடத்திலும் உள்ளது.

இதில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மீதமிருக்கும் 4 போட்டிகளில் 2 ல் வென்றாலே ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆனால் சன்ரைசர்ஸ், கொல்கத்தா அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த இரு அணிகளில் ரன்ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி 5-ம் இடத்தில் உள்ளது. கடைசி இரண்டு இடங்களில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் உள்ளன. பெங்களூரு மீதமுள்ள ஒரு போட்டியில் தோற்றாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழக்கும்.

சென்னை, மும்பை அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ள நிலையில், அடுத்த இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் எவை என்பதற்கான போட்டியே அதிகமாக உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி குவாலிபயர் சுற்றுக்கும், 3ம் மற்றும் 4ம் இடங்களை பிடிக்கும் அணி எலுமினேட்டர் சுற்றுக்கும் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply