TV

6807407510_87e96e8176_b

லண்டன், 21.04.19:

பீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் தனது காதலனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண், போலிஸ் அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் டேனியெலா ஹேர்ஸ்ட் (30). இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு தனது காதலர் கிறேக் ஸ்மித்(31) என்பவருடன் உணவகம் ஒன்றில் பீட்ஸா வாங்குவதற்காக சென்றபோது, திடீரென்று அங்கு பலர் முன்னிலையில் தனது காதலருடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய இந்த வீடியோ, இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கில் சிறை தண்டனையிலிருந்து தப்பிய இருவருக்கும், 12 மாதங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் மற்றும் 23 வாரங்கள் இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணிவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று சில நிபந்தனைகளை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் ஸ்கார்பரோ நகரில் போலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த வாரம் டேனியெலா ஹேர்ஸ்ட்டுக்கு 16 மாத சிறைத்தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, தற்போது அப்பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply