TV

6807407510_87e96e8176_b

ஹைதராபாத், 21.04.19:

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 38 லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. ஹைதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் குயிஸ் லிக், சுனில் நரைன் அதிரடி துவக்கம் தந்தனர். ஆனால் இந்த அதிரடி சற்று நேரத்தில் மந்தமானது. 8 பந்துகளை சந்தித்த நரைன் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 25 ரன்கள் எடுத்து காஹில் அகமது பந்துவீச்சில் போல்டானார். இதன் பிறகு கொல்கத்தா அணியின் சரிவு ஆரம்பமானது.

தொடர்ந்து களமிறங்கிய சுப்மான் கில் 3 ரன்களிலும், ராணா 11 ரன்களிலும், கேப்டன் கார்த்திக் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 73 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்த கொல்கத்தா அணிக்கு, அதன் பிறகு களமிறங்கிய ரிங்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குயிஸ் லின், ரிங்கு ஜோடி 5 வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில் ரிங்கு 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதமடித்த லின் 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாார்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. கே.சி கரியப்பா 9 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் காஹில் அகமது 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய ஹைதராபாத் அணியின் ஜானி பாஸ்டோ, டேவிட் வார்னர் இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர். இவர்களில் அதிரடியில் ஹைதராபாத் அணியின் ரன் விகிதம் மளமளவென உயர்ந்தது. இருவரும் அரைசதம் அடித்த நிலையில், வார்னர் 38 பந்துகளி்ல் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் பாஸ்டோவுடன் ஜோடி சேர்ந்து  ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 15 ஓவர்களில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அரைசதம் அடித்த பாஸ்டோ 43 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சருடன் 80 ரன்களுடனும், வில்லியம்சன் 9 பந்துகளில் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply