TV

6807407510_87e96e8176_b

மும்பை, 22.04.19:

காமசூத்ரா 3டி படத்தில் நடித்த நடிகை சாயிரா கான் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கடந்த 2013ம் ஆண்டு 3டி தொழில் நுட்பத்தில் வெளியான படம் காமசூத்ரா. இந்த படத்தில் நடிகையாக நடித்தவர் நடிகை சாயிரா கான். ஷெர்லின் சோப்ராவுக்கு பதில் இவர் இப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சாயிரா கான் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். சாயிரா கான் மரணம் குறித்து படத்தின் இயக்குநர் ரூபேஷ் பவுல் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாயிரா மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். திறமையான நடிகையாக இருந்தும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்த சாயிராவை இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளச் செய்ய சவாலாக இருந்தது. ஒருசில மாதங்கள் தொடர் முயற்சிக்குப் பிறகு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அவரைத் தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply