TV

6807407510_87e96e8176_b

கோவை

மெஹந்தி சர்க்கஸ் படக்குழுவினர் கோவையிலுள்ள தனியார் மாலில் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

கடந்த ஏப்ரல் 19 அன்று வெளியான படம் மெஹந்தி சர்க்கஸ், 1990 களில் நடக்கும் காதல் கதைகளை மையப்படுத்திய உருவான இந்த படத்திற்கு இளையாராஜா இசையமைத்திருந்தார். இளைய தலைமுறை முதல் அனைவருக்குமான படம், இதை திரையரங்கில் பார்க்கும்போது பயணத்தின் அனுபவமும், நம்முடைய காதலையும், திரும்பி பார்க்க வைக்கும்.

வட இந்தியாவில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் சர்க்கஸ் குழுவின் நாயகியை சார்ந்த கதை. இப்படத்தில் , குஜராத் சர்க்கஸ் குழுவினரையே கொடைக்கானல் கூட்டி வந்து நடிக்க வைத்ததாக, நேற்று சரவணம்பட்டியிலுள்ள தனியார் மாலில் உள்ள திரையரங்கில் இயக்குனர் குரு ராஜேந்திரன் தெரிவித்தார். வட இந்திய பெண்ணும், தென்னிந்திய வாலிபனும் இசையின் பின்னணியில் காதலிக்கும் அருமையான படம் மெஹந்தி சர்க்கஸ் என இதன் கதாநாயகன் தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply