TV

6807407510_87e96e8176_b

கோவில்பட்டி, 22.04.19:

கோவில்பட்டி அருகே நள்ளிரவில் கருப்பட்டி வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் பணீக்கர்குளம் – ஆத்திகுளம் இடையே தரைப்பாலம் தடுப்பு சுவரில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக நள்ளிரவில் கயத்தார் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த ஆண்சலடத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது சடலமாக கிடந்தது பனீக்கர்குளத்தை சேர்ந்த பாண்டிராஜ் என்பவரது மகன் பூபாண்டி(25) என்பது தெரியவந்தது. கருப்பட்டி வியாபாரம் செய்து வந்த இவர் நேற்று இரவு வெளியே செல்வதாக கூறி வீட்டை விற்று சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பிவில்லை என்று கூறுப்படுகிறது. இதையெடுத்து போலீசார் பூபாண்டியன் உடலை பிரதே பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், சம்பவ இடத்தினை கோவில்பட்டி டி.எஸ்.பி.பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து, மேப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கான காரணம் முன்விரோதமா, தொழில் போட்டியா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் கருப்பட்டி வியாபாரி வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply