TV

6807407510_87e96e8176_b

சென்னை, 22.04.19:

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்கார் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், தளபதி 63 என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகிறனர். கால்பந்து ஆட்டத்தினை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் கதிர், விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்திற்கு, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்பந்து மகளிர் அணி மற்றும் அதன் பயிற்சியாளரை மையமாகக் கொண்டும், மகளிர் அணி தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் முன் எதிர்கொள்ளும் இடையூறுகள் குறித்தும் கல்கி என்ற கதையை தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தேன்.

இந்த நிலையில், அந்த கதையைத் தழுவி இயக்குநர் அட்லி, நடிகர் விஜய்யை வைத்து தளபதி 63 என்ற படத்தை எடுத்து வருகிறார். இதுதொடர்பாக திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன். ஆனால் உறுப்பினராகி 6 மாதங்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே கதை திருட்டு தொடர்பாக விசாரிக்க முடியும் எனக் கூறி எனது புகாரை நிராகரித்து விட்டனர்.  எனவே, தளபதி 63 படத்தின் கதையை என்னுடையது என அறிவிக்க வேண்டும். இந்த திரைப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அட்லி இதற்கு முன்பு இயக்கிய அனைத்து படங்களும் கதை சர்ச்சையில் சிக்சியது குறிப்பிடத்தக்கது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply