TV

6807407510_87e96e8176_b

கோவை, 23.04.19:

கோவை அருகே தூக்கில் தொங்கிய நிலையில், ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை க.க.சாவடி அருகே முள்புதரில் அடையாளம் தெரியாத ஆண் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்ட பொதுமக்கள் க.க. சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரனையில், தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டவர் மேற்கு வங்க மாநிலம், பிர்பாரா மாவட்டத்தை சேர்ந்தவர் பெயர் ஸ்வேரன் மார்க்ஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால், யாராவது அடித்து கொலைசெய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா, என்றும் விசாரித்து வருகிறார்கள்.

இவர் எதற்காக கோவை வந்தார் எங்கு தங்கியுள்ளார் என்ற விபரங்கள் தெரியாத நிலையில், க.க. சாவடி காவல் நிலைய இன்பெக்டர் மனேஜ்குமார் தலைமையில் தனிபடை அமைத்து விசாரித்து வருகிறார்கள்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply