TV

6807407510_87e96e8176_b

கோவை, 23.04.19:

கோவையில் ஒழுக்கம் மற்றும் நன்றாக படிக்கும் திறன் கொண்ட ஆதரவற்ற குழந்தைகளை இலவச விமான பயணத்தில் பெங்களூருக்கு 4 நாட்கள் சுற்றுலா பயணம் அழைத்துச் செல்கின்றனர்.

கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள பிஎஸ்ஜி கல்வி நிறுவனம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு படிப்புச் செலவுக்கான கட்டணத்தை செலுத்துவதுடன், அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றது. மேலும் இக்கல்வி நிறுவனத்தில் உள்ளே பிஎஸ்ஜி அறக்கட்டளை சார்பாக மாணவர்கள் இல்லம் என்ற விடுதியை அமைத்து, 100 மாணவர்களை கொண்டு கல்வி தரத்தை சிறப்பாக அமைத்து வருகின்றனர்.

இதில் நன்றாக படித்து, ஒழுக்கமாக உள்ள முதல் மதிப்பெண் பெற்ற ஆதரவற்ற 7 மாணவர்களை முதன்முறையாக விமானத்தில் அழைத்துச் சென்று பெங்களூர், மைசூர் நகரங்களை சுற்றி பார்க்கும் திட்டத்தை பிஎஸ்ஜி குடும்பங்களின் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் வகுத்துள்ளனர். முதன் முறையாக விமானத்தில் பறந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு இந்த ஆதரவற்ற மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.

இது, பல கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை யோசிக்க வைத்துள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply