TV

6807407510_87e96e8176_b

சென்னை, 24.04.19:

களவாணி – 2″ திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், படத்தை ரிலீஸ் செய்ய இடைக்காலத் தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு விமல், ஓவியா நடிப்பில் வெளியான படம் களவாணி. இயக்குநர் சற்குணம் இயக்கிய இந்த படம் தமிழ்நாடு அரசு அரசின் சிறந்த படத்திற்கான இரண்டாவது விருதை பெற்றது.  இந்நிலையில் 9 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமாக களவாணி 2′ படத்தை இயக்குநர் சற்குணம் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் மூலம் விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் மீண்டும் இணைந்துள்ள நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயனும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மாதவனும் வெளியிட்டிருந்தனர். களவாணி – 2 படத்தைக் கோடை விடுமுறையில் திரையிட, மிக வேகமாக பணிகள் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்க கோரி, தனலட்சுமி நிறுவனம் சார்பில் கோபி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் தங்களிடம் பெற்ற கடனை களவாணி 2 திரைப்படத்தின் இயக்குனரான சற்குணம் திருப்பி தரும் வரை படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க கோரப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தை ஆறு வாரக் காலத்திற்கு ரிலீஸ் செய்யக் கூடாது என இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply