TV

6807407510_87e96e8176_b

உத்திரபிரதேசம், 25.04.19:

மூத்த அரசியல்வாதி மறைந்த என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் திவாரியைக் கொன்ற வழக்கில், அவரது மனைவியும் வழக்குரைஞருமான அபூர்வா சுக்லாவை கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் முதல்வருமான என்.டி திவாரியின், மகன் ரோஹித் திவாரி. இவர் திருமணமாகி தனது மனைவியுடன் டெல்லியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 11-ம் தேதி நடந்த மக்களவை தேர்தலுக்கு வாக்களிக்க உத்தரகாண்ட் சென்ற ரோஹித் திவாரி, கடந்த 15-ம் தேதி மீண்டும் டெல்லி திரும்பியுள்ளார். மேலும் அவர் வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்துள்ளார்.

பின்னர் ஏப்ரல் 16-ம் தேதி, ரோஹித்தின் அம்மா உஜ்வாலாவுக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் ரோஹித், மூக்கில் ரத்தம் வடிந்தபடி மயங்கிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், மருத்துமனையில் ரோஹித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டதால் சந்தேகமடைந்த உறவினர்கள் பிரேத பரிசோதனைக்காக ரோஹித்தின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  சோதனைக்காக அனுப்பப்பட்டது.

இதனையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில், ரோஹித் திவாரியின் கழுத்து நெறிக்கப்பட்டிருப்பதாகவும், மூச்சுத் திணறி அவர் உயிரிழந்ததாகவும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார், ரோஹித் வீட்டில் இருந்த 7 சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றி சோதனை செய்தனர். அதேபோல அவருடைய மனைவி அபூர்வா, அவரது வீட்டில் வேலை செய்த பெண் மற்றும் உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அப்போது, வீட்டு வேலைக்காரப்பெண்ணிடம் விசாரித்தபோது, கடந்த சில மாதங்களாக ரோஹித்துக்கும் அவரின் மனைவிக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளதாகவும், ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.  இதனையடத்து ரோஹித்தின் மனைவி அபூர்வாவிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் கூறிய பதில்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளன. இதனையடுத்து ரோஹித் வீட்டில் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் அபூர்வாதான் கொலை செய்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ரோஹித்துடன் தனக்கு நடந்த திருமணத்தில் மகிழ்ச்சியில்லாத காரணத்தினால்தான் கணவரைக் கொன்றதாக அவர் அபூர்வா கூறியிருக்கிறார். ஏப்ரல் 16-ம் தேதி ரோஹித்தின் அறைக்குள் சென்ற அபூர்வா தலையணை வைத்து அழுத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் கொலை செய்த அனைத்து தடயங்களையும் வெறும் 90 நிமிடங்களில் அழித்துள்ள நிலையில், இந்த கொலை சம்பவத்தில், அபூர்வாவின் முன்னாள் காதலனுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவதால் போலீசார் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

 



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply