TV

6807407510_87e96e8176_b

கோவை, 26.04.19:

தேர்தல் முடிவுகளை எல்லோரையும் போல எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் வேண்டுமென தான் பேசவில்லை எனவும் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் நூறடி சாலையில் ஜோயாலுக்காஸ் நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி நகைக்கடையை திறந்து வைத்ததை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மே 16 ம் தேதி தனது சிந்துபாத் திரைப்படம் வெளியாகிறது எனவும், பிடித்த படங்களில் நடித்து வருகிறேன் எனவும், எல்லா விதமான படத்திலும் நடிப்பேன் எனவும் அவர் கூறினார்.

மேலும் மதுரையில் நேற்று ஆட்சி மாற்றம் வேண்டுமென நான் பேசவில்லை எனவும், தான் பேசாததை பேசியதாக திரித்து பேசாதீர்கள் எனக்கூறிய அவர், தேர்தல் முடிவுகளை எல்லோரையும் போல எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தான் பேசினேன் என தெரிவித்தார்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply