TV

6807407510_87e96e8176_b

திருவனந்தபுரம், 27.04.19:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ளது நாய்கட்டி பகுதியை சேர்ந்தவர் நாசர். இவருடைய மனைவி அமலா (37). இவர்களுக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், நாசர் அதே பகுதியில் கணினி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் பென்னி (47) என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று வெள்ளக்கிழமை என்பதால் மதியம் தொழுகைக்காக நாசர் அங்குள்ள பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட வீட்டில் அமிலா வீட்டில் தனியாக இருந்ததை பணன்படுத்தி, தனது உடலில் பன்றிகளை கொல்ல பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்களை கட்டிக்கொண்டு அமிலாவிக் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அமிலா கூச்சல் போட்டு கத்திய நிலையில், பதற்றமான பென்னி திடீரென வெடிபொருட்களை வெடிக்க செய்துள்ளார்.

இந்த சம்பத்தில் படுகாயமடைந்த பென்னி, மற்றும் அமிலா இருவரும் சம்பவ அடத்திலேயே உயிரிழந்தனர். வெடிச்சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பென்னி வீட்டிலிருந்து ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், அமினா வீட்டுக்குள் பென்னி நுழைந்தது ஏன்? தானும் உயிரிழந்து, பக்கத்துவீட்டு பெண்ணான அமினாவையும் கொன்றது ஏன்? என்பன குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமிலாவின் கணவர் நாசர் தொழுகைக்கு சென்றிருந்ததாலும், அவரின் குழந்தை வெளியே விளையாடிக்கொண்டு இருந்ததாலும், அதிஷ்டவசமாக  உயிர் தப்பியுள்ளனர். வெடிபொருள் வெடிக்க செய்து பக்கத்துவீட்டு பெண்ணை கொலை செய்தவர் தானும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply