TV

6807407510_87e96e8176_b

கொழும்பு, 27.04.19:

இலங்கை சாய்ந்தமருது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது, பல முக்கியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிறிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளதாவது;

கொழும்பு உட்பட பல பகுதிகளில் தொடர் தற்கொலைக் குண்டு தாக்குதலை மேற்கொண்டவர்களின் முக்கிய பகுதியாக சாய்ந்தமருது வீடு இருந்துள்ளது. அங்கு கிடைத்த ஆவணங்கள் மற்றும் காணொலிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையின்போது அதிகளவிலான வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள், ட்ரோன் கேமரா போன்றவை மீட்கப்பட்டுள்ளன.

தொடர் குண்டு தாக்குதல்களுக்கு பொறுப்பேற்பதாக, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பெயரில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. அந்தக் காணொலியும் இந்த பகுதியில் வைத்து படமாக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்தவர்கள் அணிந்திருந்த உடைகளும், பயங்கரவாத இயக்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட துணியும் மீட்கப்பட்டுள்ளது. அந்த காணொலியின் பின்பகுதியில் காணப்பட்டதாக கருதப்படும் திரையைப் போன்ற திரையொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம், குண்டுகளை வெடிக்கச் செய்தவர்களின் பிரதான பகுதியாக இந்த வீடு கண்டறியப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டை அதிரடிப் படையினர் முற்றுகையிட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றது. இதில், சிறுவர்கள், பெண்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

காயமடைந்த இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அந்த இருவரையும் தேடும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்” என்று சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply