TV

6807407510_87e96e8176_b

சென்னை, 28.04.19:

மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்காவுக்கு செல்ல விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பேச முடியாத அளவுக்கு தொண்டையில் வலி ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், அவருக்கு தைராய்டு மற்றும் குரல் வள பிரச்னை இருந்தது தெரிந்தது.

இதையடுத்து அமெரிக்காவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்ற அவர், ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று கடந்த பிப்ரவரி 16ம் தேதி சென்னை திரும்பினார். சென்னையில் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் விஜயகாந்த் கடந்த 15ம் தேதி சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் பிரசாரம் செய்தார். வேனில் இருந்தவாறு, சில நிமிடங்கள் மட்டுமே மெதுவாக பேசினார்.
இந்நிலையில் மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில், 4 சட்டசபை தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவாக விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், பிரசாரம் முடிந்ததும் அமெரிக்காவுக்கு விஜயகாந்த் செல்வார் என்று தெரிகிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply