TV

6807407510_87e96e8176_b

கொழும்பு, 29.04.19:

“உண்மைகளை கண்டறிவதில் அரசாங்கம் பொறுப்பை உணர்ந்து செயல்படாவிட்டல், நாம் வீதிக்கு இறங்க நேரிடும்” என்று, கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை கூறினார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று காலை விசேஷ செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை பேசுகையில், “பயங்கரவாத தாக்குதலை கண்டறிய ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை நியமித்ததாக கூறியுள்ள போதிலும், அதுகுறித்த எந்த தெளிவும் இல்லை.

இந்த விசாரணைக் குழுவும், இதற்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட விசாரணை குழுக்களை போல செயலிழந்து போய்விடுமோ என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. உண்மைகளை கண்டறிவதில் அரசாங்கம் பொறுப்பை உணர்ந்து செயல்படாவிட்டல், நாம் வீதிக்கு இறங்க நேரிடும். முடியுமென்றால், இந்த விஷயத்தில் மட்டும் தீர்வுகாண சகல கட்சிகளையும் இணைந்து அரசாங்கம் ஒன்றினை உருவாக்குங்கள்” என தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply