TV

6807407510_87e96e8176_b

கொழும்பு, 29.04.19:

”தீவிரவாதத்தை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. தீவிரவாதத்திற்கு துணை புரிபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஆதரவு வழங்குவோம்” என, முல்லைத்தீவு பள்ளிவாசல் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கடந்த 21ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில், 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்ற போதிலும், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், தற்கொலை குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத மக்களும் இணைந்து பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் சார்பில், கியிராபுரம் பள்ளிவாசலில் நேற்று (28ம் தேதி) மாலை துவா பிரார்த்தனை இடம்பெற்றது.

இதன்போது சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கூறுகையில், ”தனது மதத்தை போலவே மற்ற மதங்களை நேசிக்கவும் மதிக்கவும் இஸ்லாம் கூறுகிறது. அப்படியிருக்கையில், உண்மையான முஸ்லிம் எந்தவொரு மதத்தையும் நிந்திக்க மாட்டான்; அவர்களுடைய உரிமைகளை பறிக்கவும் மாட்டான். தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்கவேண்டும். அதனை ஒழித்துக்கட்டுவதற்கு, பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆதரவு வழங்குவோம்.

தீவிரவாதத்தை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. தீவிரவாதத்திற்கு துணை புரிபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஆதரவு வழங்குவோம். இஸ்லாம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட ஈனச் செயல்களை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply