TV

6807407510_87e96e8176_b

கோவை, 01.05.19:

அந்தமானில் நடைபெற்ற யோகசன போட்டியில் கோவையை சேர்ந்த இரண்டு பெண்கள் தங்கம் மற்றும் வெள்ளிபதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 26 ஆம் தேதி முதல் 4 நாட்களாக அந்தமானில் 4வது தேசிய அளவிலான சப் ஜூனியர், சூப்பர் ஜூனியர் என பல்வேறு பிரிவுகளில் யோகாசன போட்டி நடைபெற்று வந்தது. இதில் தமிழகத்திலிருந்து 47 பேர் என நாடு முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கோவையை சேர்ந்த 100 வயது கொண்ட பத்மஸ்ரீ விருதை பெற்ற ஞானம்மாள் ஓசோன் யோகா பயிற்சி மையத்திலிருந்து பாலகிருஷ்ணன் தலைமையில் சென்ற 20 நபர்கள் தங்க மெடலும், 30 முதல் 40 வயது கொண்ட யோகாசன போட்டியில் கௌசல்யா என்பவர் முதல் பரிசாக தங்க பதக்கமும்,இரண்டாம் பரிசாக புவனேஸ்வரி என்பவர் வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.ஆரோக்யத்திற்காக கற்று கொண்ட பார்பம்பரிய யோக பயிற்சி முறையில் இரண்டு பெண்மணிகள் பதக்கம் வென்றது தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply