TV

6807407510_87e96e8176_b

புதுடெல்லி, 02.05.19:

ஈரானிடம் இருந்து பெட்ரோல் டீசல் வாங்குவதை இன்றுடன் இந்தியா நிறுத்தபோவதையடுத்து இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் நிலையில் உள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையே இருந்த அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து உலக நாடுகள் யாரும் ஈரானிடம் எண்ணெய் பொருட்களை வாங்க கூடாது என்று அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இதில் இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்றோடு அந்த அவகாசம் முடிகிறது.

இந்நிலையில் இன்றுடன் இந்தியா – ஈரான் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது. இந்தியாவிற்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வழங்கும் நாடுகளில் ஈரான் மூன்றாம் இடத்தில் உள்ள நிலையில், இந்தியா இன்றோடு அதிகாரப்பூர்வமாக ஈரானிடம் இருந்து பெட்ரோல் டீசல் வாங்குவதை நிறுத்த போவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா இனிமேல் சவுதி, அமெரிக்கா, அமீரகத்திடம் இருந்து மட்டுமே எண்ணெய் வாங்க முடியும். ஆனால் இவர்கள் ஈரான் போல குறைவான விலையில் எண்ணெய் விற்பதில்லை. அதேபோல் சலுகைகளும் கிடையாது. மேலும் இந்த தடை காரணமாக மற்ற நாடுகளும் இதே மூன்று நாடுகளிடம் இருந்து மட்டுமே பெட்ரோல் டீசல் வாங்க முடியும். இதனால் தேவை அதிகம் ஆகி, இவர்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை.

இதனால் நாளையில் இருந்து பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயரும் என கூறப்படுகிறது. ஈரானிடம் இந்தியா ஏற்கனவே வாங்கி இருக்கும் பெட்ரோல் டீசல் கையிருப்பு தீரும் வரை கொஞ்சம் சமாளிக்க முடியும். அதன்பின் பெட்ரோல் டீசல் விலை கிடு கிடுவென்று உயரும். முக்கியமாக தேர்தல் முடிந்த பின் ஒரே அடியாக பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை தொட வாய்ப்பு இருக்கிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply