TV

6807407510_87e96e8176_b

சென்னை, 02.05.19:

ஐ.பி.எல். தொடரில் 50-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை அணியில் காய்ச்சல் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத சென்னை கேப்டன் டோனி, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் அணியில் இடம்பிடித்ததால்,  முரளிவிஜய், துருவ் ஷோரே, மிட்செல் சான்ட்னெர் கழற்றி விடப்பட்டனர். தொடர்ந்து ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கினர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை ஆடுகளத்தில் இருவரும் மந்தமாக ஆடிய நிலையில், பந்தை சந்திக்க தடுமாறிய வாட்சன் 9 பந்துகளை சந்தித்து ரன் ஏதுமின்றி வெளியேறினார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, பிளிஸ்சிஸ்சுடன் கைகோர்த்தார். இருவரும் அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். 8.5 ஓவர்களில் சென்னை அணி 50 ரன்களை தொட்டபோது, பிளிஸ்சிஸ் 41 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி களமிறங்கிய நிலையில், மறுமுனையில சுசித்தின் சுழலில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டிய சுரேஷ் ரெய்னா 37 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார்.

தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா அதிரடியாக ஆடி 10 பந்துகளில் 2 சிக்சர் 2 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிரென்ட் பவுல்ட் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்த தோனி 22 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.  20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் சென்னை அணி 91 ரன்களை சேர்த்தனர். டெல்லி தரப்பில் சுசித் 2 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ், அக்‌ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா (4) விக்கெட்டை இழந்தது. 2-வது விக்கெட்டுக்கு ஷிகர் தவானும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். ஸ்கோர் 52 ரன்களை எட்டிய போது தவான் 19  ரன்களில் ஹர்பஜன் பந்துவீச்சில் கிளன் போல்டானார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் 44  ஜடேஜா பந்துவீச்சில் தோனியில் அற்புதமான் ஸ்டெம்பிங்கில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் டெல்லி அணி 16.2 ஓவர்களில் 99 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் 9 வெற்றிகள் பெற்ற சென்னை அணி 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply