TV

6807407510_87e96e8176_b

மும்பை, 02.05.19:

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா போதை மருந்து வைத்திருந்ததாகக் கூறி, ஜப்பான் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதால், பஞ்சாப் அணி தடைசெய்யப்படும் நிலையில் உள்ளது.

பாம்பே டையிங், பிரிட்டானியா பிஸ்கட் உள்ளிட்ட பல்துறை சார்ந்த தொழில்களை வாடியா குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இதன் தலைவரான நுஸ்லி வாடியாவின் மகன் நெஸ் வாடியா (47). ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் இருக்கும் நெஸ் வாடியா, கடந்த மாதம் விடுமுறையைக் கொண்டாட ஜப்பான் சென்றபோது, போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக ஜப்பான் நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் ஐபிஎல் விதிமுறைகளின்படி, அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் யாரும் அணிக்கும், தொடருக்கும், பிசிசிஐ அமைப்புக்கும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் வெளி உலகில் செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்பட்டால், அந்த நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அணி, தடையை எதிர்நோக்க வேண்டியது இருக்கும். இதற்கு உதாரணமாக, சிஎஸ்கே அணி,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகிகளான குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்து, அது நிரூபிக்கப்பட்டது.

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் அணிக்கும் 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுபோல் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கும் தற்போது தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஐபிஎல் விதிமுறைகளின்படி, இந்த விவகாரம் முதலில் விசாரணை ஆணையத்துக்கு அனுப்பப்படும். அதன்பின் பிசிசிஐ குறைதீர்ப்பு அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.

இது குறித்து பிசிசிஐ முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் தவறு செய்ததால், அந்த அணிக்கு என்ன கதி நேர்ந்ததோ அதே போன்று தான் கிங்ஸ்லெவன் அணிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. நெஸ் வாடியாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி தடையையோ அல்லது சஸ்பெண்டையோ எதிர்நோக்கி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், அந்த அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து நீதிபதி லோதா குழு தண்டனை விதித்தது.

அதுபோல, அணியின் உரிமையாளர் அல்லது நிர்வாகி போதை மருந்து வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் கிரிக்கெட் வாரிய அதிகாரியாக பதவியில் இருந்தால், இந்த தண்டனை அறிவிக்கப்பட்டவுடனே அவர் பதவியை இழந்துவிடுவார் ” எனத் தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply