TV

6807407510_87e96e8176_b

கொழும்பு, 02.05.19:

இலங்கை தேவாலயத்தில் உள்ள அந்தோணியார் சொரூபம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது, கிறிஸ்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு அனுராதபுரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 152 மீட்டர் உயரத்தில் வில்பத்து சரணாலயம் உள்ளது. இதன் மத்தியில் அமைந்துள்ள ‘பள்ளகண்டல் புனித அந்தோணியார் தேவாலயம்’ மிகவும் சிறப்பு மிக்க தேவாலயங்களில் ஒன்றாக உள்ளது. சிலாபம் மறைமாவட்டத்தின் கீழ் அமைந்துள்ள இந்த தேவாலயத்தில், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாவை தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து வெகு கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த தேவாலயத்தில் உள்ள அந்தோணியார் சொரூபம் கடந்த 30ம் தேதி இரவு, அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (1ம் தேதி) காலை வழக்கம்போல் தேவாலயத்திற்கு சென்றவர்கள், அங்கு, அந்தோணியார் சொரூபம் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, ஆலய நிர்வாகம் சார்பில் அப்பகுதிக்கு பொறுப்பான போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரனை நடத்தினர்.

இதுகுறித்து தேவாலய நிர்வாகிகள் கூறுகையில், “தொடர்ந்தும் கத்தோலிக்க மதத்தையும், தேவாலயங்களையும் குறிவைத்து தாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. இது, கிறிஸ்தவ மக்கள் மத்தியில் ஒருவிதமான வெறுப்பை உருவாக்கி உள்ளது. இருந்தும் எமது கத்தோலிக்க திருச்சபை, மக்களிள் வழிபடும் மற்ற மதங்களை எப்போதும் மதித்து, அன்பு செலுத்தி ஒற்றுமையுடன் ஆன்மிகப் பணிகளை முன்னெடுக்கும். இதில், எந்தவிதமான மாற்றுக் கருத்தோ, சந்தேகமோ தேவையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply