TV

6807407510_87e96e8176_b

கோவை, 03.05.19:

ஐ.பி.எல். ப்ளேஅப் சுற்று ஆட்டங்களை கொடிசியா பேன் பார்க் மைதானத்தில் கண்டுகளிக்கலாம் பி.சி.சி.ஐ. பேன் பார்க் ஒருங்கிணைப்பாளர் இர்பான் தாதன் தெரிவித்துள்ளார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பி.சி.சி.ஐ பேன் பார்க் ஒருங்கிணைப்பாளர் இர்பான் தாதன் மற்றும் கோவை மாவட்ட கிரிகெட் சங்க நடுவர் கமிட்டி செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

தற்போது நடைபெற்று வரும் 12வது ஐ.பி.எல் தொடரின் கடைசி கட்ட லீட் ஆட்டங்கள் வரும் 4 மற்றும் 5 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தெரிவித்தனர். இதனை கிரிகெட் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில், கோவை கொடிசியா மைதானத்தில் 32 x 18 ராட்சத திரையில் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளதாக தெரிவித்தனர். மாலை 4 மணி மற்றும் 8 மணிக்கு நடைபெறும் ஆட்டங்களை 8000 பேர் அமர்ந்து பார்க்க கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் ஐ.பி.எல் தொடருக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை அடுத்து பி.சி.சி.ஐ இந்த பேன் பார்கை 36 மாநகரங்களில் ஏற்பாடு செய்யபட்டு உள்ளதாக தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் 65 மாநிலங்களில் பேன் பார்க் சென்றடைந்து உள்ளதாகவும், இந்த ஆண்டு புதிதாக தேஸ்பூர், காங்தாக், பிலாய், உனா, ஷிமோகா, திருநெல்வேலி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களிலும் பான் பார்க் புதிதாக உருவாக்க பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply