TV

6807407510_87e96e8176_b

 

சிங்கப்பூர், 04.05.19:

பேஸ்புக் நிறுவனத்தின் பிரத்தியேக டேட்டிங் அம்சமான பேஸ்புக் டேட்டிங் வசதி இப்போது சிங்கப்பூரில் பயன்பான்டுக்கு வந்துடுள்ளது.

டேட்டிங்க் எனப்படும் ஜோடிகளை தேடும் வசதியை உலக அளவில் பல வலைதளங்கள் அளிக்கின்றன. குறிப்பாக டின்டர், பம்பல் போன்றவை இதற்காகவே தனித்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எனினும் இந்த வலைதளங்களில் நுழைய பேஸ்புக் கணக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனமே டேட்டிங் சேவையை அறிமுகம் செய்து விட்டது.

முதன் முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோதனை முறையில் கொலம்பியாவில் டேட்டிங் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, இதே டேட்டிங் சேவையை கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சோதனை முறையில் பேஸ்புக் நிறுவனம் வழங்கியது. இந்நிலையில் இப்போது சிங்கபூர் நாட்டிலும் இந்த பேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக்.

இதன் மூலம் இப்போது சிங்கப்பூர் உட்பட 19 நாடுகளில் பேஸ்புக் டேட்டிங் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பேஸ்புக் டேட்டிங் சேவை மூலம், பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் உரையாடவும், தங்களுக்கான ஜோடிகளை தேர்வு செய்யவும் முடியும். இந்த சேவை 18 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply