TV

6807407510_87e96e8176_b

புதுடெல்லி, 04.05.19:

தேர்தல் பிரசாரத்தின் போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டார்.

டெல்லியின் மோடி நகரில், திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது பிரசார வாகனம் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அடித்தார்.

திடீரென தாக்கப்பட்டதால் கெஜ்ரிவால் நிலை குலைந்த நிலையில் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே தாக்கப்பட்டவரை ஆம்ஆத்மி கட்சியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply