TV

6807407510_87e96e8176_b

கொழும்பு, 07.05.19:

“இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று, நான் ஒருபோதும் பதவி விலகப்போவதில்லை” என, ஜனாதிபதி சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 250க்கும் அதிகமான அப்பாவி மக்கள் பலியாகினர்.

இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இலங்கையில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை தடுக்க முடியாமல் போனது குறித்து மிகவும் கவலையடைகிறேன். ஆனாலும், அந்த சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறோம்.

மேலும், இத்தகைய சம்பவங்கள் வேறு நாடுகளில் நடைபெற்றபோது, அந்நாட்டு தலைவர்கள் எவரும் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகியதில்லை. ஆகையால், நானும், இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பதவி விலகப்போவதில்லை” என தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply