TV

6807407510_87e96e8176_b

சென்னை, 08.05.19:

2019 ஐபிஎல் டி20 தொடர் தற்போது இருதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லீக் ஆட்டங்கள் முடிவுற்று நேற்று முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்கியது. லீக் போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் மோதியது.

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியில் டுபிளேஸிஸ் 4 ரன்களும், வாட்சன் 10 ரன்களும் எடுத்து வெளியேறிய நிலையில், ஆடுத்து களமிறங்கிய ரெய்னாவும் 5 ரன் ரன்களில் வெளியேறியதால், சென்னை அணி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ராயுடு மற்றும் தோனி இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தாலும், போதிய ரன்கள் கிடைக்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விகெட்டுகளை இழப்பிற்கு  131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களத்தில் இறங்கிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 132 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி நேரடியாக இறுதி போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றது.

இந்த தோல்விக்கு பிறகு பேசிய சென்னை அணி கேப்டன் தோனி கூறுகையில்,

சேப்பாக்கம் மைதானத்தில் பேட்டிங் செய்வது டெஸ்ட் ஆடுகளம் போல் மிகவும் கடினமாக இருந்தது. சென்னை வீரர்கள் அதை கணித்து பொறுமையாக விளையாட தவறிவிட்டார்கள். அதே சமயம் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷி என்னை பிரமிக்க வைத்துவிட்டது. இந்த போட்டியை பொறுத்தவரை ரோஹித் சர்மா என்னைவிட மிகவும் சிறப்பாக மும்பை அணியை வழிநடத்தினார். ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷி எங்கள் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

மேலும் எங்கள் அணி வீரர்கள் பில்டிங்கில் மிகப்பெரிய அளவில் சொதப்பினர். குறிப்பாக முக்கியமான சமயங்களில் வாட்சன் மற்றும் சூரியகுமார் யாதவ் இரண்டு கேட்சை பிடிக்காமல் தவறவிட்டனர். இதுவும் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம்தான். சென்னை அணியை பொறுத்தவரை பில்டிங் தான் தொடர்ந்து தலைவலியாக இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் அதே தவறுதான் நடந்துவிட்டது”, என்று கூறியுள்ளார்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply