TV

6807407510_87e96e8176_b

விசாகபட்டினம், 09.05.19:

2019 ஐபிஎல் தொடரின் நாக் அவுட் சுற்றில் நேற்று நடைபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

2019 ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற ப்ளேஅப் சுற்றின் இரண்டாவது போட்டியில் ஹைதராபாத் சன்ரைசஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க வீரர் சஹா 8 ரன்களிலும், அதிரடியாக ஆடிய கப்தில் 19 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சருடன் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய மனிஷ் பாண்டே 36 பந்துகளில் 30 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 27 பந்துகளில் 28 ரன்களிலும், அதிரடியாக ஆடிய விஜய் சங்கர் 11 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 25 ரன்களும், நபி 13 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன்ரைசஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளும், போல்ட், மிஸ்ரா தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவர்களில் 66 ரன்கள் சேர்த்த நிலையில், ஷிகர் தவான் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களிலும், அரைசதடித்த தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 38 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ரிஷப் பாண்ட் ஒருபுறம் அதிரடியாக ஆட மறுமனையில், முரே 14 ரன்களிலும், அக்சர் பட்டேல் 0 ரன்களிலும், ரூதர்போர்டு 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ரிஷப் பாண்ட அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 21 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து இறுதிகட்டத்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் கீமோ பால் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

19.5 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைஸ் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் அடுத்த சுற்று ஆட்டத்தில் டெல்லி அணி சென்னைஅணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 12 ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

 



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply