TV

6807407510_87e96e8176_b

விசாகப்பட்டினம், 10.05.19:

2019 ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2வது நாக்-அவுட் ஆட்டத்தில்தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,  ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரிட்சை.

2019 ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், லீக் சுற்றுகளின் முடிவில் மும்பை, சென்னை, டெல்லி, மற்றும் ஹைதராபாத் அணிகள் ப்ளேஅப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் முதலில் நடந்த குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில சென்னை அணியை வீழ்த்திய மும்பை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்து நடைபெற்ற எலமினேட்டர் சுற்றில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி குவாலிஃபையர் 2 வது போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் குவாலிஃபையர் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற டெல்லி அணியும் இன்று குவாலிஃபையர் 2வது போட்டியில் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பலவீனம் பவர் ப்ளே ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுப்பது. மேலும் பவர் ப்ளே ஓவர்களில் இவர்களது சராசரி ஐபிஎல் அணிகளிலேயே படுமோசமாக உள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் ஷேன் வாட்சன் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார். அதற்கு முன்பும், பின்பும் அவர் சோபிக்கவில்லை.

சென்னை அணி தரப்பில் கேப்டன் தோனி மட்டுமே நடப்பு தொடரில் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார். கடைசிகட்ட ஓவர்களில் அதிரடியாக ஆடும் தோனி இந்த சீசனில் எடுத்த 405 ரன்கள் எடுத்துள்ளார். இதில் சுமார் 200 ரன்களுக்கும் மேல் டெத் ஓவர்களான 18-20- ஓவர்களில் எடுத்ததாகும். பந்துவீச்சில் இம்ரான் தாகிர், ஜடேஜா, தீபக் சஹார், ஆகியோர் பலம் சேர்க்கிறார்.

சென்னை அணியின் பலம் அதன் ஸ்பின்னர்கள், சென்னை ஸ்பின்னர்கள் இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இது மற்ற அணிகளை விட இதுதான் அதிகம்.  மேலும் சென்னை அணி கடந்த போட்டியில் பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டது. இந்த போட்டியில் அந்த தவறுகளை சரி செய்யும் பட்சத்தில் சென்னை அணியின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வய்ப்பு பிரகாசமாகும்.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி இளம் வீரர்களை கொண்டுள்ளது. ப்ரித்வி ஷா, ரிஷப் பாண்ட், தவான், கேப்டன் ஸ்ரோயாஸ் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சில் போல்ட், கீமோ பால், மிஸ்ரா அக்சர் பட்டேல் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.  மேலும் லீக் சுற்றில் சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் 180 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணி 99 ரன்களுக்கு சரணடைந்தது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் எப்படி தோனியின் சூட்சமங்களை உடைத்ததோ அப்படி டெல்லி கேப்பிடல்ஸும் உடைக்க வேண்டும். மிடில் ஓவர்கள்தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பலவீனம் அதை தோனி சரியாகப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply