TV

6807407510_87e96e8176_b

கோவை, 10.05.19:

மலைவாழ் மக்கள் குலதெய்வ வழிபாடு கிடா, கோழி பலி கொடுத்து பாரம்பரிய இசை ஒலித்து நடனமாடி வழிபாடு செய்தனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மருதமலையில் வசித்து வரும் மலைவாழ் மக்களின் குல தெய்வமும் , காவல் தெய்வமும் ஆன வன மணியரசி அம்மன் கோவில் ஆண்டு விழா நேற்று நடைப்பெற்றது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மக்கள் திரண்டு சென்று வனத்தில் உள்ள கோவிலில் பொங்லிட்டு வழிபடுவது வழக்கம். அதன் பின்பு அடுத்த ஆண்டு வரை அந்த கோவிலுக்கு யாரும் செல்ல மாட்டார்கள். முன்னோர்கள் காட்டுப்பகுதியில் வேட்டையாடவும் , மேய்சல் போன்ற வேலையில் ஈடுபடும் போது தங்களுக்கு காவல் தெய்வமாக உடன் நின்று காக்கும் பெண் தெய்வமாக வன மணியரசி அம்மன் இன்று வரை உள்ளதாக மலைவாழ் மக்களின் ஐதீகம்.

இந்த விழாவில் தூமைக்கரை , அட்டுக்கல் , சேம்புக்கரை , மாங்கரை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாளான நேற்று சுவாமியை சிறப்பு அலங்காரம் செய்து கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்்டனர். அம்மனுக்கு கிடா , கோழி பலி கொடுத்தனர். பின்னர். விடிய விடிய பெண்கள் கும்மி அடித்தும் , பாரம்பரிய குழல் வாத்தியம் இசைத்து நடனம் ஆடி மகிழ்ந்தனர். அனைவருக்கும் கறி விருந்து பரிமாரப்பட்டது. நேற்று மாலை துவங்கிய விழா விடிய விடிய நடந்த்து.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply