TV

6807407510_87e96e8176_b

விருதுநகர், 11.05.19:

விருதுநகர் அருகே குடித்துவிட்டு அடித்த கணவனை கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு சடலத்தை வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்த மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாண்டீஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ஆறுமுகம் குடித்து விட்டு அடிக்கடி தனது மனைவி பாண்டீஸ்வரியிடம் தகராறு செய்து, அவரை அடித்து துண்புறுத்தவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கவன் மனைவி இருவருக்குமு் ஏற்பட்ட குடும்ப தகராறு, அக்கம் பக்கத்தினருக்கும் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் சில நாட்களாக ஆறுமுகம் அந்த பகுதியில் யாரும் பார்க்கவில்லை. மேலும் பாண்டீஸ்வரி மட்டும் வீட்டிற்குள் சென்று வந்திருக்கிறார். இந்நிலையில் ஆறுமுகத்தின் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சந்தேகமடைந்த நிலையில், பாண்டீஸ்வரி வெளியே போன நேரம் பார்த்து வீட்டின் பூட்டை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது ஆறுமுகம் அழுகிய நிலையில் சடலம் கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆறுமுகம் மரணம் குறித்து பாண்டீஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாண்டீஸ்வரி முன்னுக்கு பின் முரணான பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், பாண்டீஸ்வரியே தனது கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது கணவன் தினசரியும் குடித்து விட்டு வந்து அடித்து தொந்தரவு செய்ததால்,  ஆத்திரமடைந்து போதையில் மயங்கிய நிலையில் இருந்த அவரை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டதாகவும், அவர் இறந்த பின் சடலத்தை வீட்டிலேயே மறைத்து வைத்திருந்தாலும், துர்நாற்றம் காட்டிக்கொடுத்துவிட்டது என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாண்டீஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply