TV

6807407510_87e96e8176_b

கோவை, 11.05.19:

பொள்ளாச்சி அருகே குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள் அம்பராம்பாளையம் ஆற்றில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது சென்னையை சேர்ந்த கிரித்திஸ் கண்ணன், அஸ்விந்த் என்ற இரண்டு சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமந்தகரையை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மனைவி ஜெயசுதா. இவர்கள் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் 26 பேர் சேர்ந்து நேற்று சென்னையில் இருந்து மூணாறு சுற்றுலா செல்வதற்காக வேனில் புறப்பட்டு சென்றனர். இன்று பொள்ளாச்சி வந்த இவர்கள் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நான்கு சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

இதனைப்பார்த்த அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் நீரில் மூழ்கிய 4 பேரையும் நீண்ட நேரம் போராடி மீட்டனர். இதில் கிரித்திஷ் கண்ணன் மற்றும் அஸ்வந்த் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மார்டின் எட்வர்ட், மற்றும் ஹரிதாஸ் ஆகிய இரண்டு பேரும் மயக்க நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆனைமலை போலீசார் இறந்த சிறுவர்களின் சடலத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர் சுற்றுலாவுக்காக வந்தபோது சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்கச் சென்றபோது, அப்பகுதி  மக்கள் ஆழமான பகுதி அங்கு குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி விளையாட்டுத்தனமாக சிறுவர்கள் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழ்ப்பு ஏற்பட்டுள்ளது நீரில் மூழ்கியவர்களை முடிந்த வரை போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply