TV

6807407510_87e96e8176_b

உசிலம்பட்டி, 13.05.19:

உசிலம்பட்டி அருகே மந்தையில் தூங்கிகொண்டிருந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் செந்தில்குமார் (33). மதுரை மிட்டாய் கடையில் வேலை பார்த்து வரும் இவர், ஊரின் மந்தையில் உறங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மந்தையில் தூங்க சென்ற செந்தில்மார், காலையில் மூக்கில் ரத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி போலீசார் இறந்து கிடந்த செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply