TV

6807407510_87e96e8176_b

ஹைதராபாத், 14.05.19:

2019 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷேன் வாட்சன் தனக்கு இரத்த காயம் ஏற்பட்டதையும், பொருட்படுத்தாமல் விளையாடியது தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த செய்தி சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்ஷேன் வாட்சன்.  ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிவரும் இவர், இந்த வருடத்துடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு ஆஸ்திரேலிய ரசிகர்களை மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் செ்னனை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சனின் ஆட்டம் பலரையும் கவர்ந்தது.

இறுதிப் போட்டியில் இவர் 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். ஷேன் வாட்சன் இந்த ஆட்டம் குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி, பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் இறுதிப்போட்டி அன்று அவர் விளையாடிய போது எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளன.

அந்த புகைப்படங்களில் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் தெரிய வந்துள்ளது. ஷேன் வாட்சன் முழங்காலில் ஒரு பெரிய இரத்த காயம் உண்டாகி அவர் கால்சட்டையின் முழங்கால் பகுதி முழுவதும் இரத்தத்தால் நனைந்துள்ளது காணப்படுகிறது. இரத்த காயம் ஏற்பட்டும் அதை வெளிக்காட்டாமல் தொடர்ந்து விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக ரன்கள் எடுத்துத் தந்த ஷேன் வாட்சனை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply