TV

6807407510_87e96e8176_b

டாப்லோ, 14.05.19:

கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பர்கினோ பாசோ நாட்டின் டாப்லோ நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில், ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துகொண்டிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக தேவாலயத்தின’ உள்ளே புகுந்த சுமார் 20 முதல் 30 பேர் கொண்ட மர்மக் கும்பல் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மேலும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிரியார் உட்பட 6 பேர் பலியாகினர். பின்னர் அந்த கும்பல் அருகில் உள்ள கடைகள் மற்றும் மருத்துவமனைக்கு தீ வைத்து அங்கிருந்த பொருட்களையும், வாகனம் ஒன்றையும் திருடிச் சென்றது. இச்சம்பவம் பர்கினோ பாசோவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் அனைவரும் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிரியார் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் தேவாலயத்துக்கும் அதனை சுற்றி உள்ள கட்டிடங்களுக்கும் தீ வைத்துவிட்டு, அந்த கும்பல் தப்பி சென்றது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என கூறப்டுகிறது. கடந்த 5 வாரங்களில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட 3-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply