TV

6807407510_87e96e8176_b

கோவை, 14.05.19:

கோவையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளம்பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், ஒப்பணக்கார வீதி பகுதியிலுள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அதே நகைக்கடையில் பணிபுரியும், குமாரபாளையம் பகுதியை சேர்ந்த சண்முகராஜா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களின் பழக்கம் நெருக்கமாகிய நிலையில், அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக சண்முகராஜா கூறியுள்ளார். இதையடுத்து காதலை ஏற்று்கொண்ட இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த சண்முகராஜா, அந்த பெண்ணுடன் அவ்வப்போது வெளியில் சென்று வர துவங்கியுள்ளார்.

இந்நிலையில் சண்முகராஜனுக்கு வேறு சில பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டதால் நாளடைவில் காதலித்த பெண்ணுடனான உறவை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண் சண்முகராஜனின் சொந்த ஊரான குமாரபாளையத்திற்கு சென்றபோது, சண்முகராஜானின் குடும்பத்தினரும் அப்பெண்ணை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அப்பெண் சண்முகராஜன் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் புகாரை பெற்று கொண்ட பெண் காவல் ஆய்வாளர் ஒருவர், சண்முகராஜாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறிய அப்பெண், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே காவல்நிலையத்தில் புகார் அளித்து மூன்று மாதங்களாகியும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும், பல பெண்களுடன் சண்முகராஜாவிற்கு தொடர்பு இருப்பது தெரிந்தும் குற்றவாளிக்கு ஆதரவாக காவ்ல்துறையினர் செயல்படுவதாகவும் அப்போது அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் தந்தை இன்றி தாயிடம் வாழும் தனக்கு நீதி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply