TV

6807407510_87e96e8176_b

சென்னை, 15.05.19:

சென்னையில், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 1000 தண்ணீர் கேன்களை, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை நகரில், கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று (14ம் தேதி), உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து சென்னை கொளத்தூர், கோயம்பேடு, வேளச்சேரி ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டெம்போ, மினிவேன் உள்ளிட்ட வாகனங்களில் விற்பனைக்கு  கொண்டு செல்லப்பட்ட குடிநீர் கேன்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் நிறுவனத்தின் ஸ்டிக்கர் இல்லாத, தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத, கலங்கலாகவும், அசுத்தமாகவும் இருந்த 500 கேன்கள், கொளத்தூர் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் தலா 250 கேன்கள் என மொத்தம் 1000 தண்ணீர் கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்தந்த குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

“தரமற்ற கேன் குடிநீர் தொடர்பாக, 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply