TV

6807407510_87e96e8176_b

சென்னை, 15.05.19:

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது மனைவி இளந்தென்றல். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தபோது காதலித்து வந்துள்ளார்.  இந்நிலையில், காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் காரம்பாக்கத்திலேயே பிரவீன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். தற்போது இளந்தென்றல் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 18-ம் தேதி எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில் பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் மிகுந்த வேதனையடைந்த இளந்தென்றல் கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்துள்ள நிலையில், கணவரின் இழப்பை தாங்க முடியாததால், மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை  இளந்தென்றல் வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியில் வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மாமனார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இளந்தென்றல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனமுடைந்த இளந்தென்றல் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply