TV

6807407510_87e96e8176_b

கோவை 15.05.19

வரும் ஜூன் 6 ஆம் தேதி சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி கோவை கொடிசிய வளாகத்தில் துவங்குகிறது. 800 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என கண்காட்சி அதிகாரிகள் எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர்.

வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 18 வது சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பந்தய சாலையில் உள்ள கிளப்பில் நடைபெற்றது. இதில் கொடிசியா தலைவர் மற்றும் தொழில் கண்காட்சி தலைவர் உள்பட கண்காட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் இந்த கண்காட்சி குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கண்காட்சி தலைவர் பாலு கூறுகையில் :

இந்த கண்காட்சி வரும் ஜூன் 6 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதிவரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது, இந்த கண்காட்சியில் 575 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும் இந்த கண்காட்சியில் சீனா, டென்மார்க், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட 12 வெளிநாடுகளை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர், மேலும் இந்தியாவில் இருந்து 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் இந்த கண்காட்சியை பார்வையிட சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரக்கூடும் என எதிர்பார்க்கிறோம்.

 

சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகமும் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். மேலும் இந்த கண்காட்சியை பார்வையிட வர்த்தகர்கள் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரையும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மாணவர்கள் இந்த கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளனர். அவர்கள் முன்பே அனுமதி வாங்க வேண்டும்.  இந்த கண்காட்சியில் அனைத்து தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கங்கள் மற்றும் செய்லமுறையும் செய்து காண்பிக்கப்பட உள்ளது என்றார்.

அதனை தொடர்ந்து கொடிசியா தொழிற்காட்சி தலைவர் ராமமூர்த்தி பேசுகையில், இந்த கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வேளாண் கண்காட்சி, கட்டுமானம், புத்தக கண்காட்சி என எண்ணற்ற கண்காட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது நாளுக்கு நாள் கண்காட்சியும் அதனை பார்வையிட வரும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பயனடைந்து வருவதோடு மட்டும் அல்லாமல் தொழில் வளர்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் தற்போது நடைபெற உள்ள இந்த கண்காட்சி பலதரப்பட்ட சிறு குறு தொழில்முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மேலும் கோவையில் இராணுவ தளவாட உற்பத்தி பூங்கா அமைய உள்ளது.

இதனால் இந்த கண்காட்சி மூலம் வர்த்தகர்கள் தங்களது தேவைக்கேற்ப தொழில் நுட்பங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் தங்களது தொழிலை மேம்படுத்தி கொள்ள முடியும் என்றார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply