TV

6807407510_87e96e8176_b

பொள்ளாச்சி, 16.05.19:

பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை வனப்பகுதியில் காட்டு யானைகளுக்குள் நடந்த மோதலில் ஆண் யானை ஒன்று பலியானது.

பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சேத்துமடை டாப்சிலிப் மலை அடிவார பகுதியில், கடமான், புள்ளிமான், காட்டு மாடு, யானை என விலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கியதால் கேரளா வனப் பகுதியில் வறட்சியின் காரணமாக யானை கூட்டங்கள் நீர் நிலைகளை தேடி வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்பு தினம் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அடர்வன பகுதியான பூங்கன் ஓடை போத்தமடை பீட்டில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பது தெரிய வந்ததை தொடர்ந்து, வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து DFo மாரிமுத்து, ரேஞ்சர் காசிலிங்கம், கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த யாணைக்குபிரத பரிசோதனை செய்தனர்.

இது குறித்து ரேஞ்சர் காசிலிங்கம் கூறுகையில், கடந்த சில நாட்கள் முன்பு காட்டு யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஆண் பலி ஆனதாகவும், இறந்த யானையின் உடலில் இருந்த இரண்டு தந்தங்களை அகற்றி வனத்துறை அலுவலகத்தில் ஓப்படைத்தாகவும், காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ரோந்து பணியில்  ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply