TV

6807407510_87e96e8176_b

சென்னை, 16.05.19:

2010 ஆசிய தடகள போட்டியில் கலந்து கொண்டு நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற வீரர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் அடுத்த செனாய் நகரை சேர்ந்தவர் பத்ரிநாத் மகன் பாலகிருஷ்ணன்(29) அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு நீச்சல்  போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த இவர், நேற்று இரவு தனது உறவினரை பார்த்துவிட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது முன்னே கலவை ஏற்றிச் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் எதிர்பாராதவிதமாக அந்த லாரியின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதற்கு காரணமான லாரி டிரைவர் சுப்பிரமணி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply