TV

6807407510_87e96e8176_b

ஹைதராபாத், 16.05.19:

சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர், கடும் வெப்பம் காரணமாக ஹைதராபாத்தில் திடீரென மரணமடைந்த நிலையில், அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தற்போது சுதந்திரப் போராட்ட வீரர், உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறது. இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவரும் நிலையில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், சுதீப், தமன்னா, விஜய் சேதுபதி உட்பட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகிறார்.

மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்த வரலாற்றுப் படத்தில் ஏராளமான பிரிட்டீஷ் நடிகர்களும் நடித்து வருகின்றனர். அதில் ஒருவராக நடித்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் (38). கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்த இவர் தனது நண்பர் போரெஸூடன் கோவாவில் தங்கியுள்ளார். பின்னர், மும்பை சென்ற அவர், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் ஷூட்டிங்கிற்கு ஏஜெண்ட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, இந்த படத்தில் நடித்துவரும் பிரிட்டீஷ்காரர்களில் ஒருவராக அவர் நடித்தார்.

ஹைதராபாத், கடப்பா உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட அலெக்ஸாண்டர், கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் சுற்றித் திரிந்துள்ளார். மேலும் ஹைதராபாத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால்,  வெப்பம் தாங்காமல் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள சைபர் சிட்டி அருகே அலெக்ஸாண்டர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இந்நிலையில் அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில், அவரிடம் இந்த கேமராவை பார்த்தபோதுதான், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அலெக்ஸாண்டர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதனைத்தொடர்ந்து கோவாவில் இருக்கும் அவர் நண்பரை தொடர்பு கொண்டு போலீசார் சம்பவம் குறித்து தெரிவித்த நிலையில், அவர் தற்போது ஹைதராபாத் வந்துகொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply