TV

6807407510_87e96e8176_b

கோவை, 17.05.19:

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் வெளியானதை தொடர்ந்து, கோவையில் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படத்தை காண கோவையில் அதிகாலையிலேயே ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். கோவை கவுண்டம்பாளையம், கல்பனா திரையரங்கம் முன்பாக கோவை மாவட்ட சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் வினோத், நரசிம்மன்மற்றும் வடிவேலு ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் படத்திற்காக சி்.கே.பேக்ஸ் வழங்கிய 20 கிலோ கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதனைத்தொடர்ந்து கேக்கை ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு வழங்கி மேள தாளத்துடன் நடனமாடி தங்களது ஆதரவை ரசிகர்கள் தெரிவித்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply