TV

6807407510_87e96e8176_b

தேனி, 17.05.19:

2019 லோக் சபா தேர்தல் முடிவுகள் இன்றும் வெளியாகாத நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் கல்வெட்டில் இந்த தொகுதியின் அதிமுக வேட்பாளரும், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் பெயர், “தேனி பாராளுமன்ற உறுப்பினர்” என பொறிக்ப்பட்டுள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஷ்வர பகவான் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் உள்ள காசி ஸ்ரீ அன்னபூர்ணி ஆலயத்திற்கு நேற்று கும்பாபிஷேகப் பணிகள் நடந்த நிலையில் இந்த பணிகளுக்காக நன்கொடை அளித்த பெயர்கள், கல்வெட்டில் பொறிக்கப்பட்டு கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 18ல்  தேனி லோக்சபா தொகுதி பொதுத் தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. ஆனால் தற்போது தேனி மவட்டத்தில் இரு வாக்குச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு மே 19ல் நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு இடம் மாற்றியது தொடர்பாக எதிர்கட்சியினர், காங்., அ.ம.மு.க.,வினர் பிரச்னை செய்தனர்.

இந்நிலையில் தற்போது புதிய குழப்பமாக, லோக் சபா தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி, குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் சுரபி நதிக்கரையில் உள்ள காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், தேனி லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் பெயர், “தேனி பாராளுமன்ற உறுப்பினர்” என, விதிமுறை மீறி பொறிக்கப்பட்டு, கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் பதிலளிக்க மறுத்துவிட்டனர்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply