TV

6807407510_87e96e8176_b

வேலூர், 18.05.19:

கணவர் மற்றும் 1 வயது மகனை கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆற்காடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திமிரி அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (25) எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஆற்காடு அடுத்த தாஜ்புரா கூட்ரோடு மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த தீபிகா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரவீன் என்ற 1 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், திருமணத்துக்கு பின்னர் ராஜா தனது மனைவி தீபிகாவுடன் தாஜ் புரா கூட்ரோடு மந்தைவெளி பகுதியில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மே 13ஆம் தேதி முதல் தனது கணவர் ராஜா மற்றும் தனது குழந்தை பிரவீண் ஆகிய இருவரும் காணவில்லை என மே 16 ஆம் தேதி தீபிகா ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் தீபிகா அளித்தார். இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது தீபிகா அளித்த புகாரில் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தீபிகாவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரிய வந்த நிலையில், காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த 13ஆம் தேதி ராஜாவுக்கும் தீபிகாவுக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ராஜா தனது குழந்தை பிரவீணை தூக்கிக் கொண்டு சென்றுவிட்டதாகவும் தீபிகா காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.  தீபிகாவின் இந்த தகவலால்  மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தனது கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரவீன் ஆகிய இருவரையும் கொலை செய்து அவரது வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரையில் புதைத்துள்ளதாக தீபிகா கூறியுள்ளார்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீபிகாவை அழைத்துச் சென்ற ஆற்காடு கிராமிய காவல்துறையினர் இருவரது உடல்களும் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுமாறு கூறியதை தொடர்ந்து, தீபிகாவும் அடையாளம் காட்டியுள்ளார்.

தொடர்ந்து, ஆற்காடு வட்டாட்சியர் மற்றும் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோரின் முன்னிலையில் ராஜா மற்றும் அவரது குழந்தை பிரவீன் ஆகிய இருவரின் உடல்களும் ஏரிக் கரையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தீபிகாவுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து தீபிகாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்! மனைவியே கணவன் குழந்தையைக் கொலை செய்து புதைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply