TV

6807407510_87e96e8176_b

பழனி, 18.05.19:

பழனியில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழனி அருகே அமர பூண்டியை சேர்ந்தவர் சங்கர். இவர் மீது கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள சங்கர் நேற்றிரவு அவர் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி ஓடியது.

அதேபோல் ஆயக்குடி பகுதியில் தாஜூதீன் என்பவரை அவரது தம்பிகளான ஜாகிர் உசேன், காதர்மைதீன் ஆகியோர் சொத்து பிரச்சினை காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்தனர். இருவரது உடல்களையும் கைப்பற்றிய ஆயக்குடி போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பழனி பகுதியில் நேற்று ஒரே நாளில் பட்டப்பகலில் ஒருவரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சி நடைபெற்ற நிலையில், நேற்று இரவு நடந்த இரண்டு கொலை சம்பவங்களால் பொது மக்களிடையே கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பழனி பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது பொதுமக்கனிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply