TV

6807407510_87e96e8176_b

கோவை, 20.05.19

வைகாசி விசாகத்தையொட்டி கோவை மருதமலை அருள்மிகு சிப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டனர்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முருகனின் ஏழாம் படைவீடு என்று போற்றப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அந்தச்சங்கம் சார்பில் உலக நன்மை வேண்டியும், பருவமழை பொழிய வேண்டியும், இயற்கையை பாதுகாக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது அங்கு நடத்தப்பட்ட நூற்றி எட்டு திருவிளக்கு வழிபாட்டில் பெண்கள் திரளாக பங்கேற்று சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.

உலக அமைதியை வேண்டியும், வறட்டி நீங்க எங்கும் மழை பெய்ய வேண்டியும், இயற்கையை பாதுகாக்கவும் முருகப்பெருமானிடம் வேண்டிய பக்தர்கள் மங்கள மந்திரங்களை கூறி திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பட்டன.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply