TV

6807407510_87e96e8176_b

மதுரை, 20.05.19:

கடந்த 1978-ம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த நடிகர் விவேக், தனது கல்லூரி கால நண்பர்களுடன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், குளங்கள் வற்றி, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் தண்ணீர் பிரச் சினை ஏற்பட்டுள்ளது. மரங்கள் அதிக எண்ணிக்கையில் வெட்டப் பட்டதுதான் இதற்குக் காரணம். தொடர்ந்து மரங்களைநட வேண்டும். அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப் பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர் வாருவதில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.

தற்போது மரக்கன்றுகளை நடவு செய்தால்தான் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மூலம் அதிக மழையைப் பெற முடியும். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் மூதாட்டி ஆகி வருகிறது. அரசியான ஊட்டியையும் மூதாட்டியாக மாற்றி வருகிறோம் என்றார்.

இதனையடுத்து அரசியல் குறித்து நடிகர் விவேக்கிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அரசியலில் அதிகம் பேர் உள்ளனர். நாம் முதலில், நல்ல கருத்துகளைத் திரைப்படங்கள் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்வோம். நேரம் வரும்போது நானும் அரசியலுக்கு வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply