TV

6807407510_87e96e8176_b

புதுடில்லி, 20.05.19:

பதினெட்டு வயது பூர்த்தியாகாத இளம்பெண், மனைவியே ஆனாலும் தாம்பத்ய உறவு கொள்வது பாலியல் வன்முறைக்கு இணையானதுதான் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா கொண்ட அமர்வு, முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை அடிப்படையில், இண்டிபெண்டன்ட் தாட் எனும் அரசு சாரா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 375(2)ன் படி, 15 வயதுக்குக் கீழுள்ள தன் மனைவியுடன் ஒருவர் பாலியல் உறவுகொள்வது வன்கொடுமை ஆகாது என குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால், போக்ஸோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களை குழந்தைகளாகவே கருத வேண்டும் என கூறுகிறது;

சட்டப்பிரிவுகள் 14, 15, 21 ஆகியவற்றை சட்டப்பிரிவு 375(2) மீறுகிறது. இது அடிப்படை உரிமைக்கு எதி ரானது என்று அந்த மனுவில் குறிப் பிடப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதால், அவர்கள் சிறு வயதிலேயே கர்ப்பிணியாகி சிரமப்படுகின்றனர்; எனவே குழந்தைத் திருமணத்தைத் தடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா அமர்வு விசாரித்தது. அப்போது, 15 முதல் 18 வயது வரையிலான சிறுமிகளை திருமணம் செய்து பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமையாகாது என்ற இந்திய தண்டனைச் சட்டம் 375(2)வது பிரிவு சரிதான் என்று மத்திய அரசு வாதிட்டது.18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தால் குற்றம் என்று போக்ஸோ சட்டம் சொல்கிறது;

ஆனால், இந்திய தண்டனை சட்டத்தின் 375வது பிரிவு, 15 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட மனைவியுடன் வலுக்கட்டாயமாகத் தாம்பத்திய உறவுகொள்வது பாலியல் வன்முறைக் குற்றம் அல்ல என்று கூறுவது முரண்பாடாக இருக்கிறது என்று இண்டிபெண்டன்ட் தாட் வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 18 வயது நிரம்பாத சிறுமியுடன் அவர் கணவரே பாலுறவு கொண்டாலும் அது பாலியல் வன்முறைதான் என்று தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் ஓராண்டுக்குள் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply