TV

6807407510_87e96e8176_b

இஸ்லாமாபாத், 21.05.19:

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆசிப் அலி. இவர் தற்போது இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், இவரது 2 வயது மகள் நூர் பாத்திமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி, நூர் பாத்திமா உயிரிழந்தார்.

 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நேற்று விளையாடிய ஆசிப் அலிக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட அவருக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். நேற்று இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஆசிப் அலி 22 ரன்கள் சேர்த்தார்.

பாகிஸ்தான் அறிவித்த முதல்கட்ட உலகக்கோப்பைக்கான அணியில் ஆசிப் அலி இடம்பெறவில்லை. இன்று மூன்றுபேரை நீக்கி அதற்கான மாற்று வீரர்களை அறிவித்துள்ளது. இதில் ஆசிப் அலி பெயர் இடம்பெற்றுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply